அதிகாரம் / Chapter 132

திருக்குறள் 1317

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்யாருள்ளித் தும்மினீர் என்று.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

யாம் தும்மினேம்; அதற்காக வாழ்த்தினாள்; நும்மை யார் நினைக்கத் தும்மினீர் என்று சொல்லி மீட்டும் அழுதாள். இது தும்மினும் குற்றமென்று கூறியது.

பரிமேலழகர்

இதுவும் அது. தும்மினேனாக வழுத்தினாள் - கூறியிருக்கின்றவள் யான் தும்மினேனாகத் தன் இயற்கை பற்றி வாழ்த்தினாள்; அழித்து யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள் - அங்ஙனம் வாழ்த்திய தானே மறித்து, 'நும்மை நினைத்து வருந்துகின்ற மகளிருள் யாவர் நினைத்தலால் தும்மினீர்?' என்று சொல்லிப் புலந்தழுதாள். விளக்கம் (வாழ்த்தலொடு புலத்தல் இயையாமையின், 'அழித்து' என்றான் அன்புடையார் நினைத்தவழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்பது மகளிர் வழக்கு. 'இவ்வழக்கை உள் வழக்காகக் கருதிப் புலந்தாள்' என்பதாம்.)

English explanation

She hailed me when I sneezed one day; But straight with anger seized,She cried; 'Who was the woman, pray, Thinking of whom you sneezed?'

When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, "At the thought of whom did you sneeze?"