அதிகாரம் / Chapter 132

திருக்குறள் 1313

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்காட்டிய சூடினீர் என்று.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பக்கப்பூச் சூடினும் ஒருத்திக்குக் காட்டுதற்காகச் சூடினீரென்று சொல்லிக் காயும். பக்கப்பூ- ஒப்பனைப்பூ. கோட்டுப்பூ சூடினீர் என்பதற்கு வளைப்பூச்சூடினீரெனினுமாம். இது கோலஞ்செய்யினும் குற்றமென்று கூறியது.

பரிமேலழகர்

தலைமகள் புலவிக் குறிப்பினைக் கண்டு, 'நீவிர் கூடியொழுகா நிற்கவும் இது நிகழ்தற்குக் காரணம் யாது?' என்ற தோழிக்கு தலைமகன் சொல்லியது. கோட்டுப்பூச் சூடினும் - யான் கோடுதலைச் செய்யும் மாலையைச் சூடினேனாயினும்; ஒருத்தியை காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மாற்காதலிக்கப் பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளாநிற்கும்; இத்தன்மையாட்கு ஒரு காரணம் வேண்டுமோ? விளக்கம் ('கோடு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். பூ - ஆகுபெயர்; வளையமாகச் சூடினும் என்பதாம்; ''கோட்டம் கண்ணியும் கொடுந்திரையாடையும்'' (புறநா. 275) என்றார் பிறரும். இனி, 'அம் மருதநிலத்துப் பூவன்றி வேற்றுநிலத்துக் கோட்டுப்பூவைச் சூடினேனாயினும், ஈண்டையாள், 'பிறளொருத்திக்கு அவ்வேற்றுப் பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளும்,' எனினும் அமையும்.)

English explanation

I wreathed with flowers one day my brow, The angry tempest lowers;She cries, 'Pray, for what woman now Do you put on your flowers?'

Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman.