அதிகாரம் / Chapter 102

திருக்குறள் 1017

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்நாண்துறவார் நாணாள் பவர்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

நாணுடைமைப் பொருட்டாக உயிரைத் துறப்பார்: உயிர்ப் பொருட்டாக நாணைத்துறவார், நாணம் வேண்டுபவர். இது நாண் உயிரினும் சிறந்ததென்றது.

பரிமேலழகர்

நாண் ஆள்பவர் - நாணினது சிறப்பு அறிந்து அதனை விடாதொழுகுவார்; நாணல் உயிரைத் துறப்பார் - அந்நாணும் உயிரும் தம்முள் மாறாயவழி நான் சிதையாமைப் பொருட்டு உயிரை நீப்பார்; உயிர்ப்பொருட்டு நாண் துறவார் - உயிர் சிதையாமைப் பொருட்டு நாணினை நீக்கார். விளக்கம் (உயிரினும் நாண் சிறந்ததென்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவற் செயல்கூறப்பட்டது.)

English explanation

The men of modest soul for shame would life an offering make,But ne'er abandon virtuous shame for life's dear sake

The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.