அதிகாரம் / Chapter 126

திருக்குறள் 1260

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோபுணர்ந்தூடி நிற்பேம் எனல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தீயின்கண்ணே நிணத்தையிட்டாற்போல, உருகும் நெஞ்சினை யுடையார்க்குக் காதலரை யெதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்போமென்று நினைத்தல் உளதாகுமோ?.

பரிமேலழகர்

விளக்கம் (புணர்தல் - ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படுதலுமாம். 'புணர' என்பது 'புணர்ந்து' எனத் திரிந்து நின்றது. 'யான் அத்தன்மையேன் ஆகலின் எனக்கு அஃது இல்லையாயிற்று,' என்பதாம்.)

English explanation

'We 'll stand aloof and then embrace': is this for them to say,Whose hearts are as the fat that in the blaze dissolves away

Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?