அதிகாரம் / Chapter 45

திருக்குறள் 450

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பலரோடு பகைகொண்டால் எவ்வளவு துன்பமுறும்; அதனினும் பத்துமடங்கு துன்பமுறும்; பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழியின்.

பரிமேலழகர்

பல்லார் பகை கொள்லின் பத்து அடுத்த தீமைத்து - தான் தனியனாய் வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்று மடங்கு தீமை உடைத்து; நல்லார் தொடர் கை விடல் - அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளா தொழிதல். (பலர் பகை ஆயக்கால் "மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல், பேது செய்து பிளந்திடல்" விளக்கம் (சீவக. விமலை. 32) என்பவையல்லது, ஒருங்கு வினையாக் குறித்துச் செய்தாலும் ஒருவாற்றான் உய்தல் கூடும்; நல்லார் தொடர்பை விட்டால் ஒருவாற்றானும் உய்தல் கூடாமையின்; இது செய்தல் அதனினும் தீது என்பதாம். இவை மூன்று பாட்டானும் அது செய்யாத வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)

English explanation

Than hate of many foes incurred, works greater woeTen-fold, of worthy men the friendship to forego

It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many.