அதிகாரம் / Chapter 45

திருக்குறள் 449

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

முதலில்லாதார்க்கு இலாபமில்லையானாற் போலத் தாங்குதலாகிய சார்பு இல்லாதர்க்கு அரசு நிலைநிற்றல் இல்லை.

பரிமேலழகர்

முதல் இலார்க்கு ஊதியம் இல்லை . முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம்; மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை - அது போலத் தம்மைத் தாங்குவதாம் துணையில்லாத அரசர்க்கு அதனான் வரும் நிலையில்லை. விளக்கம் (முதலைப் பெற்றே இலாபம் பெற வேண்டுமாறு போலத் தாங்குவாரைப் பெற்றே நிலை பெற வேண்டும் என்பதாம். நிலை: அரச பாரத்தோடு சலியாது நிற்றல்.)

English explanation

Who owns no principal, can have no gain of usury;Who lacks support of friends, knows no stability

There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.