அதிகாரம் / Chapter 86

திருக்குறள் 856

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கைதவலும் கெடலும் நணித்து.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பிறருடன் மாறுபாட்டின்கண் மிகுதல் இனிதென்று கருதுமவனும், அவன் வாழ்க்கையும் சாதலும் கெடுதலும் நணித்து. நிரனிறை. இது சாயானாயின் உயிர்க்கேடும் பொருட்கேடு முண்டாமென்றது.

பரிமேலழகர்

இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை - 'பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிது' என்று அதனைச் செய்வானது உயிர் வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து - பிழைத்தலும் முற்றக் கெடுதலும் சிறிது பொழுதுள் உளவாம். விளக்கம் (மிகுதல் - மேம்மேல் ஊக்குதல். 'இனிது' என்பது தான் வேறல் குறித்தல். பிழைத்தல் - வறுமையான் இன்னாதாதல். முற்றக் கெடுதல் - இறத்தல். இவற்றால் 'நணித்து என்பதனைத் தனித்தனி கூட்டி, உம்மைகளை எதிரதும் இறந்தது தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும் உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.)

English explanation

The life of those who cherished enmity hold dear,To grievous fault and utter death is near

Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred.