அதிகாரம் / Chapter 86

திருக்குறள் 857

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்இன்னா அறிவி னவர்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

மிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப் பொருளைக் காணமாட்டார், மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறிவுடையார். இது மாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாதென்றது.

பரிமேலழகர்

இகல் மேவல் இன்னா அறிவினவர் - இகலோடு மேவுதலையுடைய இன்னாத அறிவினையுடையார்; மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் - வெற்றி பொருந்துதலையுடைய நீதி நூற்பொருளை அறியமாட்டார். விளக்கம் (இன்னா - அறிவு - தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு. வெற்றி - வழி நின்றார்க்கு உளதாவது. காணப்படும் பயத்ததாகலின் 'மெய்ந்நூல்' னப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், 'காணார்' என்றார். இவை இரண்டு பாட்டானும் இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)

English explanation

The very truth that greatness gives their eyes can never see,Who only know to work men woe, fulfilled of enmity

Those whose judgement brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.