அதிகாரம் / Chapter 86

திருக்குறள் 858

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனைமிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

மாறுபாட்டிற்குச் சாய்தொழுகுதல் ஆக்கமாம்: அதனை மிகுதலை நினைக்கின் கேடு மிகும். இது மாறுபாட்டிற்குச் சாய்ந்தொழுகல் வேண்டுமென்றது.

பரிமேலழகர்

இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் - தன் உள்ளத்து மாறுபாடு தோன்றிவழி அதனை எதிர்தலையொழிதல் ஒருவனுக்கு ஆக்கம் ஆம்; அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம் - அது செய்யாது அதன் கண் மிகுதலை மேற்கொள்வானாயின் கேடும் தன்கண் வருதலை மேற்கொள்ளும். விளக்கம் (எதிர்தல் - ஏற்றுக் கோடல். சாய்ந்த பொழுதே வருதலின், சாய்தல் ஆக்கம் என்றார். 'இகலிற்கு' எனவும், 'அதனை' எனவும் வந்தன வேற்றுமை மயக்கம்.)

English explanation

'Tis gain to turn the soul from enmity;Ruin reigns where this hath mastery

Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin.