அதிகாரம் / Chapter 86

திருக்குறள் 855

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரேமிக்லூக்கும் தன்மை யவர்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

இகலின் எதிர் சாய்ந்தொழுக வல்லாரை வெல்ல நினைக்கும் தன்மையவர் யார்தான். சாய்ந்தொழுக வேண்டுமென்றார் அது தோல்வி யாகாதோ வென்றார்க்கு அவரை வெல்வாரில்லை யென்றார்.

பரிமேலழகர்

இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை - தம் உள்ளத்து 'மாறுபாடு தோன்றியவழி அதனை ஏற்றுக் கொள்ளாது சாய்ந்தொழுக வல்லாரை; மிகல் ஊக்கும் தன்மையவர்யார் - வெல்லக்கருதும் தன்மையுடையார் யாவர்? விளக்கம் (இகலை ஒழிந்தொழுகல் வேந்தர்க்கு எவ்வாற்றானும் அரிதாகலின், 'வல்லாரை' என்றும், யாவர்க்கும் நண்பாகலின் அவரை வெல்லக் கருதுவார் யாவரும் இல்லை என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் இகலாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)

English explanation

If men from enmity can keep their spirits free,Who over them shall gain the victory

Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?