அதிகாரம் / Chapter 119

திருக்குறள் 1189

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்நன்னிலையர் ஆவர் எனின்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

என்னுடம்பு நிலையாக என்றும் பசப்பதாக: நம்மைக் காதலித்தவரும் நம்மைப்போலத் துன்பமுறுவாராயின். இது தலைமகனது கொடுமையை உட்கொண்டு கூறியது.

பரிமேலழகர்

இதுவும் அது. நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின் - இப்பிரிவை யானே உடம்படும் வகை சொல்லியவர் இன்று நின் கருத்தான் நல்ல நிலையினர் ஆவாராயின்; என் மேனி பட்டாங்கு பசக்க - என் மேனி பட்டதுபடப் பசப்பதாக. விளக்கம் (நன்னிலையராதல் - நன்மைக்கண்ணே நிற்றலை உடையராதல். 'பட்டாங்காக' என ஆக்கம் விரித்து உரைக்க. 'முன் இப்பிரிவின் கொடுமையறியாத என்னை இதற்கு உடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவே வேண்டுவது, என் மேனியும் பசப்பும் யாது செய்யின் என்?' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.)

English explanation

Well let my frame, as now, be sicklied o'er with pain,If he who won my heart's consent, in good estate remain

If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow.