அதிகாரம் / Chapter 119

திருக்குறள் 1188

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்துறந்தார் அவர்என்பார் இல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

இவள் பசந்தாளென்று எனக்குக் குற்றம் நாடுமதல்லது, இவளைத் துறந்தார் அவரென்று அவரது கொடுமையைச் சொல்லுவார் இல்லை. இஃது இப்பசப்பு வரலாகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர்

'நீ இங்ஙனம் பசக்கற்பாலைபல்லை,' என்ற தோழியோடு புலந்து சொல்லியது. இவள் பசந்தாள் என்பது அல்லால் - இவள் ஆற்றியிராது பசந்தாள் என்று என்னைப் பழி கூறுவதல்லது; விளக்கம் (இவளை அவர் துறந்தார் என்பார் இல் - இவளை அவர் துறந்து போயினார் என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை. 'என்பார்' என வேறுபடுத்துக் கூறினாள், தன்னையே நெருங்குதல்பற்றிப் புலக்கின்றமையின்.)

English explanation

On me, because I pine, they cast a slur;But no one says, 'He first deserted her.'

Besides those who say "she has turned sallow" there are none who say "he has forsaken her".