அதிகாரம் / Chapter 133
திருக்குறள் 1321
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்வல்லது அவர்அளக்கு மாறு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அவர்மாட்டுத் தவறில்லையானாலும் அவர்செய்யும் அருள் ஊடுதலைச் செய்யவற்று. இது துன்பம் பயப்பதாகிய புலவியைச் செய்கின்றது எற்றுக்கென்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிமேலழகர்
தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, 'அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை?' என்றாட்கு, அவள் சொல்லியது. அவர்க்குத் தவறு இல்லையாயினும் - அவர் மாட்டுத்தவறில்லை ஆயினும்; அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது - நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்க வற்றாகின்றது. விளக்கம் ('அவர்க்கு' என்பது, வேற்றுமை மயக்கம். ''அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற் பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக்கருதி, அது பொறாமையான் ஊடல்நிகழா நின்றது'' என்பதாம்.)
English explanation
Although there be no fault in him, the sweetness of his loveHath power in me a fretful jealousy to move
Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.