அதிகாரம் / Chapter 29
திருக்குறள் 284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமம் தரும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
களவின்கண்ணே மிக்கஆசை, பயன்படுங் காலத்துக் கேடில்லாத நோயைத் தரும். இது நரகம் புகுத்தும் என்றது.
பரிமேலழகர்
களவின்கண் கன்றி காதல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை; விளைவின்கண் வீயா விழுமம் தரும் - அப்பொழுது இனிது போலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும். விளக்கம் (கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின், 'வீயா விழுமம் தரும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.)
English explanation
The lust inveterate of fraudful gain,Yields as its fruit undying pain
The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.