அதிகாரம் / Chapter 29
திருக்குறள் 283
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்துஆவது போலக் கெடும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
களவிற் கொண்ட பொருளா லாகிய ஆக்கம் மேன் மேலும் மிகுவதுபோலக் கெடும். இது பொருள் நிலையாதென்றது.
பரிமேலழகர்
களவினால் ஆகிய ஆக்கம் - களவினால் உளதாகிய பொருள்; ஆவது போல அளவிறந்து கெடும் - வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும். விளக்கம் ('ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. எல்லையைக் கடந்து கெடுதலாவது, தான் போங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன்கொண்டு போதல். 'அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும்' என்று உரைப்பாரும் உளர்.
English explanation
The gain that comes by fraud, although it seems to growWith limitless increase, to ruin swift shall go
The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.