அதிகாரம் / Chapter 100

திருக்குறள் 993

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்கபண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

செறியத்தகாத உடம்பாலொத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடொப்பாகாமையின் அது பொருந்துவதன்று; இனிப் பொருந்துவதாய ஒப்பாவது செறியத்தக்க பண்பாலொத்தல்.

பரிமேலழகர்

உறுப்பு ஒத்தல் மக்கல் ஒப்பு அன்று - செறியத்தகாத உடம்பால் ஒத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடு ஒப்பாகாமையின் அது பொருந்துவதன்று; ஒப்பதாம் ஒப்பு வெறுத்தக்க பண்பு ஒத்தல் - இனிப் பொருந்துவதாய ஒப்பாவது செறியத்தக்க பண்பால் ஒத்தல். விளக்கம் (வடநூலார் 'அங்கம்' என்றமையின் 'உறுப்பு' என்றார். ஒருவனுக்கு நன் மக்களோடு பெறப்படும் ஒப்பாவது, உயிரின் வேறாய் நிலையுதல் இல்லா உடம்பு ஒத்தல் அன்று; வேறன்றி நிலையுதலுடைய பண்பு ஒத்தலாகலான், அப்பெற்றித்தாய அவர் பண்பினையுடையன் ஆக என்பதாம்.)

English explanation

Men are not one because their members seem alike to outward view;Similitude of kindred quality makes likeness true

Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract.