அதிகாரம் / Chapter 100
திருக்குறள் 994
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்பண்புபா ராட்டும் உலகு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நீதியையும் அறத்தையும் விரும்புதலாற் பிறர்க்குந் தமக்கும் பயன்படுதலுடையாரது பண்பினை உலகத்தார் கொண்டாடா நிற்பர்.
பரிமேலழகர்
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் பண்பு - நீதியையும் அறத்தையும் விரும்புதலால் பிறர்க்கும் தமக்கும் பயன்படுதல் உடையாரது பண்பினை; உலகு பாராட்டும் - உலகத்தார் கொண்டாடா நிற்பர். விளக்கம் ('புரிந்த' என்னும் பெயரெச்சம் ஈண்டுக் காரணப் பொருட்டு, நயனொடு நன்றி புரிதலும் பயனுடைமையும் பண்பு காரணமாக வந்தமையின், 'அதனைப் பாராட்டும்' என்றார்.)
English explanation
Of men of fruitful life, who kindly benefits dispense,The world unites to praise the 'noble excellence.'
The world applauds the character of those whose usefulness results from their equity and charity.