அதிகாரம் / Chapter 73
திருக்குறள் 722
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
கற்றாரெல்லாரினும் கற்றாரென்று சொல்லப்படுவார், தாம் கற்றதனைக் கற்றார் முன்பு அவர்க்கு ஏற்கச் சொல்லவல்லார். இது கற்றாரென்பார் அவையஞ்சாதார் என்று கூறிற்று.
பரிமேலழகர்
கற்றாருள் கற்றார் எனப்படுவர் - கற்றார் எல்லாரினும் இவர் நன்கு கற்றார் என்று உலகத்தாரால் சொல்லப்படுவார்; கற்றார் முன் கற்ற செலச் சொல்லுவார் - கற்றாரவைக்கண் அஞ்சாதே தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளும் வகை சொல்ல வல்லார். விளக்கம் (உலகம் அறிவது அவரையே ஆகலின், அதனால் புகழப்படுவாரும் அவர் என்பதாம்.)
English explanation
Who what they've learned, in penetrating words heve learned to say,Before the learn'd among the learn'd most learn'd are they
Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.