அதிகாரம் / Chapter 116
திருக்குறள் 1153
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்பிரிவோ ரிடத்துண்மை யான்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பிரியேனென்ற தஞ்சொல்லும் நம்பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர்கண்ணும் ஒரோ வழிப் பிரிவு நிகழ்தலான் அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டன்புடையரெனத் தேறுந்தேற்றம் அரிதாயிருந்தது.
பரிமேலழகர்
இதுவும் அது. அறிவு உடையார் கண்ணும் - பிரியேன் என்ற தம் சொல்லும் நம் பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர் கண்ணும்; ஓர் இடத்துப் பிரிவு உண்மையான் - ஒரோவழிப் பிரிவு நிகழ்தலான்; தேற்றம் அரிது - அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டு அன்புடையார் எனத் தேறும் தேற்றம் அரிதாயிருந்தது. அரோ: அசைநிலை. உம்மை : உயர்வு சிறப்பின்கண் வந்தது.
English explanation
To trust henceforth is hard, if ever he depart,E'en he, who knows his promise and my breaking heart
As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible.