அதிகாரம் / Chapter 116
திருக்குறள் 1154
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்தேறியார்க்கு உண்டோ தவறு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நம்மைத் தலையளிசெய்து நின்னிற் பிரியேன். நீ அஞ்சல் என்றவர் தாமே நீங்கிப் போவாராயின் அவர் தௌ¤வித்த சொல்லைத் தௌ¤ந்தவர்க்கு வருவதொரு குற்றம் உண்டோ? தன்மையைப் படர்க்கைபோற் கூறினார்.
பரிமேலழகர்
இதுவும் அது. அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் - எதிர்ப்பட்ட ஞான்றே தலையளி செய்து, 'நின்னிற் பிரியேன் அஞ்சல் என்றவர் தாமே பின் பிரிவராயின்; தெளித்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ - அவர்க்கன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றம் ஊண்டோ? விளக்கம் ('தேறியார்' என்பது தன்னைப் பிறர்போற் கூறல். 'சொல்லும் செயலும் ஒவ்வாமைக் குற்றம் அவர்க்கு எய்தும்; அஃது எய்தாவகை அழுங்குவி' என்பது கருத்து.)
English explanation
If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurredBy those who trusted to his reassuring word
If he who bestowed his love and said "fear not" should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?