அதிகாரம் / Chapter 93
திருக்குறள் 922
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்எண்ணப் படவேண்டா தார்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
கள்ளினை உண்ணாதொழிக; உண்ணவேண்டின் சான்றோரால் மதிக்கப்படுதலை வேண்டாதார் உண்க.
பரிமேலழகர்
கள்ளை உண்ணற்க-அறிவுடையராயினார் அஃதிலராதற்கு ஏதுவாய கள்ளினை உண்ணாதொழிக; உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்-அன்றியே உண்ணல் வேண்டுவார் உளராயின், நல்லோரால் எண்ணப்படுதலை வேண்டாதார் உண். விளக்கம் (பெறுதற்கரிய அறிவைப் பெற்று வைத்தும் கள்ளான் அழித்துக் கொள்வாரை, இயல்பாகவே அஃது இல்லாத விலங்குகளுடனும் எண்ணாராகலின் 'சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க' என்றார்.)
English explanation
Drink not inebriating draught Let him count well the costWho drinks, by drinking, all good men's esteem is lost
Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great.