அதிகாரம் / Chapter 93

திருக்குறள் 923

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்சான்றோர் முகத்துக் களி.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தன்னைப்பயந்தாள் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்: அங்ஙனமாகச் சான்றோர் முன்பு களித்தல் மற்றியாதாகும்? எல்லார் முன்பும் இன்னாமையே பயப்பதென்றவாறாயிற்று.

பரிமேலழகர்

ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது-யாது செய்யினும் உவக்கும் தாய் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்; மற்றச் சான்றோர் முகத்து என்? -ஆனபின், குற்றம் யாதும் பொறாத சான்றோர் முன்பு களித்தல் அவர்க்கு யாதாம்? விளக்கம் (மனம் மொழி மெய்கள் தம் வயத்த அன்மையான், நாண் அழியும்;அழியவே, ஈன்றாட்கும் இன்னாதாயிற்று; ஆனபின், கள் இருமையும் கெடுத்தல் அறிந்து சேய்மைக்கண்ணே கடியும் சான்றோர்க்கு இன்னாதாதல் சொல்ல வேண்டுமோ? என்பதாம்.)

English explanation

The drunkard's joy is sorrow to his mother's eyes;What must it be in presence of the truly wise

Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?