அதிகாரம் / Chapter 15

திருக்குறள் 146

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பகையும் பாவமும் அச்சமும் பழியுமென்னும் நான்கு பொருளும் நீங்காவாம்: பிறனில்லின்கண்ணே மிகுவான் மாட்டு.

பரிமேலழகர்

இல் இறப்பான்கண் பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து; பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம்-பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் 'நீங்காவாம், விளக்கம் (எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண் குற்றம் கூறப்பட்டது.)

English explanation

Who home ivades, from him pass nevermore,Hatred and sin, fear, foul disgrace; these four

Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife.