அதிகாரம் / Chapter 15
திருக்குறள் 147
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்பெண்மை நயவா தவன்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அறநெறியானே யில்வாழ்வானென்று சொல்லப் படுவான். பிறன்வழியானவளது பெண்மையை விரும்பாதவன். இது பிறனில் விழையாமை வேண்டும் என்றது.
பரிமேலழகர்
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான்-அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான்; பிறன் இயலாள் பெண்மை நயவாதவன்-பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன். விளக்கம் (ஆண் உருபு ஈண்டு உடன் நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறஞ் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.)
English explanation
Who sees the wife, another's own, with no desiring eyeIn sure domestic bliss he dwelleth ever virtuously
He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder.