அதிகாரம் / Chapter 15
திருக்குறள் 148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்குஅறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பிறனது மனையாளைப் பாராத பெரியவாண்மைதானே சான்றோர்க்கு அறனும் அமைந்த வொழுக்கமுமாம். இஃது இதனை விரும்பாமைதானே அறனும் ஒழுக்கமுமென்றது.
பரிமேலழகர்
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை - பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்தகைமை; சான்றோர்க்கு அறன் ஒன்றே ஆன்ற ஒழுக்கு-சால்புடையார்க்கு அறனும் ஆம்; நிரம்பிய ஒழுக்கமும் ஆம். புறப் பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும், உட்பகை ஆகிய காமம் அடக்குதற்கு அருமையின், அதனை அடக்கிய ஆண்மையைப் 'பேராண்மை' என்றார். விளக்கம் ('ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம்.)
English explanation
Manly excellence, that looks not on another's wife,Is not virtue merely, 'tis full 'propriety' of life
That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.