அதிகாரம் / Chapter 15
திருக்குறள் 149
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நலத்துக்கு உரியார் யாரெனின் நினைத்ததைத் தருகின்ற நீர் சூழ்ந்த வுலகத்தில் பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டாதார். நலக்குரியார்- விரும்புதற்குரியார்.
பரிமேலழகர்
நாம நீர் வைப்பின்-அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட உலகத்து; நலக்கு உரியார் யார் எனின்-எல்லா நன்மைகளும் எய்துதற்கு உரியார் யார் எனின்; பிறர்க்கு உரியாள் தோள் தோயாதார்-பிறனொருவனுக்கு உரிமை ஆகியாளுடைய தோளைச் சேராதார். விளக்கம் (அகலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றான் அளவிடப்படாமையின், 'நாமநீர்' என்றார். 'நலத்திற்கு' என்பது 'நலக்கு' எனக் குறைந்து நின்றது. உரிச்சொல் (நாம) ஈறு திரிந்து நின்றது. இருமையினும் நன்மை எய்துவர் என்பதாம்.)
English explanation
Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide?The men who touch not her that is another's bride
Is it asked, "who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?" Those who touch not the shoulder of her who belongs to another.