அதிகாரம் / Chapter 15
திருக்குறள் 150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அறத்தை வரையாதே அறமல்லாதன செய்யினும் பிறனிடத்து ஆளானவளது பெண்மையை விரும்பாமை நன்று. இஃது ஓரறமுஞ் செய்திலனாயினும் நன்மை பயக்குமென்றது.
பரிமேலழகர்
அறன் வரையான் அல்ல செயினும்-ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று-அவனுக்குப் பிறன் எல்லைகண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின், அது நன்று. விளக்கம் (இக்குணமே மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறன்இல் விழையாதான்கண், குணம் கூறப்பட்டது.)
English explanation
Though virtue's bounds he pass, and evil deeds hath wrought;At least, 'tis good if neighbour's wife he covet not
Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another.