அதிகாரம் / Chapter 16
திருக்குறள் 151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தன்னை யகழ்வாரைத் தரிக்கின்ற நிலம்போலத் தம்மை யிகழுபவர்களைப் பொறுத்தல் தலைமையாம். இது பொறுத்தானென் றிகழ்வாரில்லை; அதனைத் தலைமையாகக் கொள்வார் உலகத்தாரென்றது.
பரிமேலழகர்
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல - தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம்போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம். விளக்கம் (இகழ்தல்: மிகையாயின செய்தலும் சொல்லுதலும்)
English explanation
As earth bears up the men who delve into her breast,To bear with scornful men of virtues is the best
To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.