அதிகாரம் / Chapter 16
திருக்குறள் 152
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று; அதனை மறத்தல் அப்பொறையினும் நன்று.
பரிமேலழகர்
என்றும் இறப்பினைப் பொறுத்தல்-பொறை நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதனை மறத்தல் அதனினும் நன்று-அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின் அப்பொறையினும் நன்று. விளக்கம் ('மிகை' என்றது மேற்சொல்லிய இரண்டினையும். பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறுத்தலை 'அதனினும் நன்று' என்றார்.)
English explanation
Forgiving trespasses is good always;Forgetting them hath even higher praise;
Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.