அதிகாரம் / Chapter 15

திருக்குறள் 145

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே மிகுமவன் எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான். இது பழியுண்டா மென்றது.

பரிமேலழகர்

எளிது என இல் இறப்பான்-'எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான்; விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும்-மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும். விளக்கம் (இல்லின்கண் இறத்தல்-இல்லான்கண் நெறிகடந்து சேறல்.)

English explanation

'Mere triflel' saying thus, invades the home, so he ensuresA gain of guilt that deathless aye endures

He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.