அதிகாரம் / Chapter 37
திருக்குறள் 364
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றதுவாஅய்மை வேண்ட வரும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒருவர்க்கு அழுக்கறுத்தலாவது ஆசையின்மை; அவ்வாசை யின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும். இது பொருள்மேலாசையில்லாதார் பொய் கூறாராதலின் மெய் சொல்ல அவாவின்மை வரும் என்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று.
பரிமேலழகர்
தூஉய்மை என்பது அவா இன்மை - ஒருவர்க்கு வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமை; அது வாஅய்மை வேண்ட வரும் - அவ்வவா இல்லாமைதான் மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம். விளக்கம் (வீடாவது: உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்குதல் ஆகலின், அதனைத் 'தூய்மை' என்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்து, 'தூய்மை என்பது அவா இன்மை' என்றும், மெய்ம்மையுடைய பரத்தை ஆகுபெயரால் 'மெய்ம்மை' என்றும் கூறினார். 'மற்று' மேலையதுபோல வினைமாற்றின்கண் வந்தது. வேண்டுதல்-இடைவிடாது பாவித்தல். அவா அறுத்தல், வீட்டிற்கு பரம்பரையான்அன்றி நேரே ஏது என்பதூஉம் அது வரம் வழியும் இதனால் கூறப்பட்டன.)
English explanation
Desire's decease as purity men know;That, too, from yearning search for truth will grow
Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.