அதிகாரம் / Chapter 77

திருக்குறள் 770

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானைதலைமக்கள் இல்வழி இல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

படையானது நிலையுடைய வீரரைப் பெரிது உடைத்தாயினும் தனக்குத் தலைவரை இல்லாத விடத்துத் தனக்கு வெற்றியில்லையாம். இது படையமைத்தாலும் படைத்தலைவரையும் அமைக்க வேண்டுமென்றது.

பரிமேலழகர்

நிலை மக்கள் சால உடைத்து எனினும். போரின்கண் நிலையுடைய வீரரை மிக உடைத்தே யாயினும்; தலைமக்கள் இல்வழித் தானை இல்-தனக்குத் தலைவராகிய வீரர் இல்லாத வழித் தானை நில்லாது. விளக்கம் (படைத்தலைவர் நிலையுடையரன்றிப் போவாராயின், காண்போர் இல்லெனப் பொராது தானும் போம் என்பார், 'தலைமக்கள் இல் வழி இல்' என்றார். இவை மூன்று பாட்டானும் முறையே படைத்தகையின்மையானும் அரசன் கொடைத் தாழ்வுகளானும், தலைவர் இன்மையானும் தாழ்வு கூறப்பட்டது.)

English explanation

Though men abound, all ready for the war,No army is where no fit leaders are

Though an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals.