அதிகாரம் / Chapter 77
திருக்குறள் 769
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்இல்லாயின் வெல்லும் படை.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக் கில்லை யாயின், படை பகையை வெல்லும்.
பரிமேலழகர்
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின்-தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக்கு இல்லையாயின்; படைவெல்லும்-படை பகையை வெல்லும். விளக்கம் (விட்டுப் போதலும் நின்றது நல்கூர்தலும் அரசன் பொருள் கொடாமையான் வருவன. செல்லாத் துனியாவது: மகளிரை வௌவல், இளிவரவாயின செய்தல் முதலியவற்றான் வருவது. இவையுள் வழி அவன் மாட்டு அன்பு இன்றி உதறுப் பொராமையின், 'இல்லாயின் வெல்லும்' என்றார்.)
English explanation
Where weakness, clinging fear and povertyAre not, the host will gain the victory
An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty.