அதிகாரம் / Chapter 78

திருக்குறள் 771

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைமுன்நின்று கல்நின் றவர்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

என்னுடைய ஐயன் முன்னர்ப் பகைவீரரே! நில்லாது ஒழிமின்; முன்னாள் இவன் முன்னே நின்று, கல்லிலே எழுதப்பட்டு நிற்கின்றார் பலராதலால் என்றவாறு. இஃது எளியாரைப் போகச் சொல்லி, எதிர்ப்பாரோடு பொரவேண்டும் என்றது.

பரிமேலழகர்

தெவ்விர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் பலர்-பகைவீர், இன்று இங்கு என் தலைவன் எதிர் போரேற்று நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின் கல்லின்கண்ணே நின்ற வீரர் பலர்; என் ஐ முன் நில்லன்மின்-நீவிர் அதன்கணின்றி நும் உடற் கண் நிற்றல் வேண்டின் என் தலைவனெதிர் போரேற்று நிற்றலை ஒழிமின். விளக்கம் ('என் ஐ' எனத் தன்னோடு தொடர்பு படுத்துக் கூறினமையின், அவன் வேல்வாய் வீழ்தல் பெற்றாம். கல்-நடுகல். ''நம்பன் சிலை வாய் நடக்குங்கணை மிச்சில் அல்லால் - அம்பொன் முடிப்பூண் அரசுமிலை [சீவக காந்தருவ. 317] எனப் பதுமுகன் கூறினாற் போல, ஒரு வீரன், தன் மறம் அரசன்மேல் வைத்துக் கூறியவாறு. இப்பாட்டு 'நெடுமொழி வஞ்சி' [பு.வெ.மா.வஞ்சி. 1

English explanation

Ye foes stand not before my lord for many a oneWho did my lord withstand, now stands in stone

O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues.