அதிகாரம் / Chapter 78

திருக்குறள் 772

கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

வீரர்க்குக் காட்டகத்து முயலைப் பட எய்த அம்பினும், யானையைப் பிழைக்க எறிந்த வேலை யேந்துதல் இனிது. இதுமேலதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.

பரிமேலழகர்

கான முயல் எய்த அம்பினில்-கான முயல் எய்த அம்பை ஏந்தலினும்; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது-வெள்ளிடை நின்ற யானையை எறிந்து பிழைத்த வேலை ஏந்தல் நன்று விளக்கம் ('கானமுயல்' என்றதனால் வெள்ளிடை நின்ற என்பதும், 'பிழைத்த' என்பதனாற் பிழையாமல் என்பதும், முயற்குத்தக 'எய்த' என்றதனான் யானைக் குத்தக எறிதலம் வருவிக்கப்பட்டன. இது மாற்றரசன் படையொடு பொருதான் ஓர் வீரன், அது புறங்கொடுத்ததாக நாணிப் பின் அவன்றன்மேற் சொல்லுற்றானது கூற்று.)

English explanation

Who aims at elephant, though dart should fail, has greater praiseThan he who woodland hare with winged arrow slays

It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest.