அதிகாரம் / Chapter 72
திருக்குறள் 717
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொல்தெரிதல் வல்லார் அகத்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நூல்களைக்கற்று அதன்பயனும் அறிந்துள்ளாரது கல்வி விளங்காநிற்கும்; குற்றமறச் சொற்களைச் சொல்லவல்லார் முன்னர்ச் சொல்லின். இது கல்வியின் விழுப்பம் கற்றார்க்கல்லது பிறர்க்கு அறிதலரிதென்றது.
பரிமேலழகர்
கசடு அறச்சொல் தெரிதல் வல்லாரகத்து - வழுப்படாமல் சொற்களை ஆராய்தல் வல்லார் அவைக்கண் சொல்லின்; கற்று அறிந்தார் கல்வி விளங்கும் - பல நூல்களையும் கற்று அவற்றின் ஆய பயனை அறிந்தாரது கல்வி யாவர்க்கும் விளங்கித் தோன்றும். விளக்கம் ('சொல்லின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஆண்டே சொல்லுக என்பதாம்.)
English explanation
The learning of the learned sage shines brightTo those whose faultless skill can value it aright
The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words.