அதிகாரம் / Chapter 19

திருக்குறள் 182

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதேபுறனழீஇப் பொய்த்து நகை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அறத்தை யழித்து அறமல்லாதவற்றைச் செய்வதனினும் தீது, ஒருவனைக் காணாத விடத்து இழித்துரைத்துக் கண்டவிடத்துப் பொய் செய்து நகுதல். இது பாவத்தினும் மிகப் பாவமென்றது.

பரிமேலழகர்

அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது-அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து; புறன் அழீஇப் பொய்த்து நகை-ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல். விளக்கம் (உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல்-ஒளியைக் கோறல்.)

English explanation

Than he who virtue scorns, and evil deeds performs, more vile,Is he that slanders friend, then meets him with false smile

To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue.