அதிகாரம் / Chapter 19
திருக்குறள் 183
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின் புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும்.
பரிமேலழகர்
புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின்-பிறனைக் காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்-அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும். விளக்கம் .(பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், 'சாதல் ஆக்கம் தரும்' என்றார். 'ஆக்கம்' அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். 'அறம்' ஆகுபெயர். 'தரும்' என்பது இடவழு அமைதி.)
English explanation
'Tis greater gain of virtuous good for man to die,Than live to slander absent friend, and falsely praise when nigh
Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out.