அதிகாரம் / Chapter 19

திருக்குறள் 184

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்கமுன்னின்று பின்நோக்காச் சொல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும் அமையும்; பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக, இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.

பரிமேலழகர்

கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரின்றிப்பின் வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக. விளக்கம் ('பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.)

English explanation

In presence though unkindly words you speak, say notIn absence words whose ill result exceeds your thought

Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.