அதிகாரம் / Chapter 19

திருக்குறள் 181

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்புறங்கூறான் என்றல் இனிது.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஒருவன் அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ் செய்யினும் பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம், இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது.

பரிமேலழகர்

ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; புறம் கூறான் என்றால் இனிது-பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று. விளக்கம் (புறம் கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனான் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.)

English explanation

Though virtuous words his lips speak not, and all his deeds are illIf neighbour he defame not, there's good within him still

Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite."