அதிகாரம் / Chapter 63
திருக்குறள் 628
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்துன்பம் உறுதல் இலன்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
இன்ப முறுதலை விரும்பாது இடும்பை யுறுதலை இயல்பாகக் கொள்ளுமவன் துன்ப முறுதல் இல்லை. இஃது இடுக்கணை யியல்பாகக் கொள்ளல்வேண்டு மென்றது.
பரிமேலழகர்
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்-தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தெளிந்திருப்பான்; துன்பம் உறுதல் இலன்-தன் முயற்சியால் துன்பமுறான். விளக்கம் (இன்பத்தை விழையினும், இடும்பையை இயல்பு என்னாது காக்கக் கருதினும் துன்பம் விளைதலின், இவ்விரண்டுஞ் செய்தானைத் 'துன்பம் உறுதல் இலன்' என்றார்.)
English explanation
He seeks not joy, to sorrow man is born, he knows;Such man will walk unharmed by touch of human woes
That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).