அதிகாரம் / Chapter 63

திருக்குறள் 627

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்கையாறாக் கொள்ளாதாம் மேல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று கருதி, தமக்கு உற்ற துன்பத்தைத் துன்பமாகக் கொள்ளார் மேலாயினர். இது மேல் நன்மையாற் றவஞ் செய்யுங்கால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.

பரிமேலழகர்

உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று-நாற்கதியினும் உள்ள உடம்புகள் இடும்பை என்னும் வாளுக்கு இலக்கு என்று தெளிந்து; கலக்கத்தைக் கையாறக் கொள்ளாதாம் மேல்-தம் மேல் வந்த இடும்பையை இடும்பையாகக் கொள்ளார் அறிவுடையார். விளக்கம் (ஏகதேச உருவகம். 'உடம்பு' சாதிப் பெயர். 'கலக்கம்' என்னும் காரியப் பெயர் காரணத்தின்மேல் நின்றது. 'கையாறு' என்பது ஒரு சொல்; இதற்கு ஒழுக்க நெறி என்று உரைப்பாரும் உளர். இயல்பாகக் கொள்வர் என்பது குறிப்பெச்சம..)

English explanation

'Man's frame is sorrow's target', the noble mind reflects,Nor meets with troubled mind the sorrows it expects

The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble.