அதிகாரம் / Chapter 63
திருக்குறள் 626
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்றுஓம்புதல் தேற்றா தவர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார், அதனைப் பெற்றோமென்று போற்றி வைத்தலை நன்றென்று தெளியாதவர். இது பொருட்கேட்டினால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.
பரிமேலழகர்
அற்றேம் என்று அல்லற்படுபவோ - வறுமைக்காலத்து யாம் வறியமாயினேம் என்று மனத்தால் துயருழப்பாரோ; பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர் - செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை யறியாதார்? விளக்கம் (பெற்றவழி இவறாமை நோக்கி அற்ற வழியும் அப்பகுதி விடாது ஆகலின், அல்லற்பாடு இல்லையாயிற்று. இதனான் பொருளின்மையான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.)
English explanation
Who boasted not of wealth, nor gave it all their heart,Will not bemoan the loss, when prosperous days depart
Will those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth.