அதிகாரம் / Chapter 63

திருக்குறள் 625

அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

மேன்மேலே துன்பம் வந்தனவாயினும், மனனழிவில்லாதவன் உற்ற இடுக்கண், தான் இடுக்கண்படும். இது மனனழிவில்லாதவன் உற்றதுன்பம் மேன்மேல் வரினுங் கெடுமென்றது.

பரிமேலழகர்

அடுக்கி வரினும்-இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும்-தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண் தாம் இடுக்கணிலே பட்டுப்போம். விளக்கம் (ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க 'அடுக்கி வரினும்' என்றார். 'அழிவு' என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.)

English explanation

When griefs press on, but fail to crush the patient heart,Then griefs defeated, put to grief, depart

The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him , does not abandon (his purpose).