அதிகாரம் / Chapter 118
திருக்குறள் 1174
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றாஉய்வில்நோய் என்கண் நிறுத்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
உயல் ஆற்றாத என்மாட்டு உய்வில்லாத நோயை உண்கண்கள் நிறுத்தித் தாமும் அழமாட்டாவாய் நீருலந்தன. கண்கள் தாம் நினைத்தது முடித்துத் தொழின்மாறினவென்று கூறியவாறு.
பரிமேலழகர்
இதுவும் அது. உண்கண் - உண்கண்கள்; உயலாற்றா உய்வு இல் நோய் செய்வன; என் கண் நிறுத்து - அன்று யான் உய்வ மாட்டாமைக்கு ஏதுவாய ஒழிவில்ல த நோயை என் கண்ணே நிறுத்தி; பெயலாற்றா நீர் உலந்த - தாமும் அழுதலை மாட்டாவண்ணம் நீர் வற்றிவிட்டன. விளக்கம் (நிறுத்தல்: பிரிதலும் பின்கூடாமையும் உடையாரைக் காட்டி அதனால் நிலைபெறச் செய்தல். 'முன் எனக்கு இன்னாதன செய்தலாற் பின் தமக்கு இன்னாதன தாமே வந்தன'' என்பதாம்.)
English explanation
Those eyes have wept till all the fount of tears is dry,That brought upon me pain that knows no remedy
These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up.