அதிகாரம் / Chapter 89

திருக்குறள் 887

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதேஉட்பகை உற்ற குடி.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

உட்பகையும் அஃது உற்ற குடியும், செப்பும் மூடியும் பொருந்தினாற் போலப் பொருந்தினவாயினும், பொருத்தமில்லவாம். உட்பகையுற்றார் செப்பும் மூடியும் ஒன்றுபட்டாற்போல இருந்து செப்பகத்துப் பொருள் வாங்குவார்க்கு மூடி துணையாய் அகன்று நிற்குமதுபோல அகன்று நிற்பரென்றவாறு.

பரிமேலழகர்

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் - செப்பினது புணர்ச்சி போலப் புறத்து வேற்றுமை தெரியாமற் கூடினாராயினும்; உட்பகை உற்ற குடி கூடாது - உட்பகை உண்டாகிய குடியிலுள்ளோர் அகத்துத் தம்முள் கூடார். விளக்கம் (செப்பின் புணர்ச்சி - செப்பு மூடியோடு புணர்ந்த புணர்ச்சி. உட்பகையான் மனம் வேறுபட்டமையின், புறப்பகை பெற்றுழி வீற்றுவீற்றாவர் என்பதாம். குடி கூடாது என்பதனை, நாடுவந்தது என்பது போலக் கொள்க. உட்பகை தான் உற்ற குடியோடு கூடாது என்றும் உட்பகை உண்டாய குடி அப்பகையோடு கூடாது என்றும் உரைபாரும் உளர்.)

English explanation

As casket with its cover, though in one they live alway,No union to the house where hate concealed hath sway

Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid.