அதிகாரம் / Chapter 89

திருக்குறள் 886

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்பொன்றாமை ஒன்றல் அரிது.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தன் ஒன்றினார்மாட்டு ஒன்றாமை உளதாயின், எந்நாளினும் சாவாமையைக் கூடுதல் அரிது. இது நட்டோராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று.

பரிமேலழகர்

ஒன்றாமை ஒன்றியார்கண் படின் - பகைமை, தனக்கு உள்ளாயினார் மாட்டே பிறக்குமாயின்; பொன்றாமை ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது - அரசனுக்கு இறவாமை கூடுதல் எஞ்ஞான்றும் அரிது. விளக்கம் (பொருள் படை முதலிய உறுப்புகளாற் பெரியனாய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். இவை நான்கு பாட்டானும், அதனால் தனக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)

English explanation

If discord finds a place midst those who dwelt at one before,'Tis ever hard to keep destruction from the door

If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death.