அதிகாரம் / Chapter 89

திருக்குறள் 885

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்ஏதம் பலவும் தரும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

உறவு முறையோடே வுட்பகை தோன்றுமாயின், அது கெடுதல் முறைமையோடே கூடப் பல துன்பத்தினையும் தரும். இது சுற்றத்தாராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று.

பரிமேலழகர்

உறல் முறையான் உட்பகை தோன்றின் - புறத்து உறவு முறைத் தன்மையோடு கூடிய உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இறல் முறையான் ஏதம் பலவும் தரும் - அஃது அவனுக்கு இறத்தல் முறையோடு கூடிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும். விளக்கம் (அவை, புறப்பகைத் துணையாய் நின்றே அது தோன்றாமல் கோறல் முதலிய வஞ்சனை செய்தலும், அமைச்சர் முதலிய உறுப்புகளைத் தேய்த்தலும் முதலாயின.)

English explanation

Amid one's relatives if hidden hath arise,'Twill hurt inflict in deadly wise

If there appears internal hatred in a (king's) family; it will lead to many a fatal crime.