அதிகாரம் / Chapter 31

திருக்குறள் 301

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளாத வனாவான்; இயலாவிடத்தில் அதனைத் தவிர்ந்ததனாலும் பயனில்லை, தவிராததனாலும் பயனில்லை; இது வெகுளாமையாவது வலியவன் வெகுளாமை யென்றது.

பரிமேலழகர்

சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான் - தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளாள் தடுப்பானாவான்; அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்? நடாது ஒழிந்தார் என்? விளக்கம் ('செல்லிடம்', 'அல்லிடம்' என்றது. தவத்தால் தன்னின் மெலியாரையும் வலியாரையும். 'வலியார்மேல் காவா வழியும், அதனான் அவர்க்கு வருவதோர் தீங்கு இன்மையின், காத்தவழியும் அறன் இல்லை என்பார், 'காக்கின் என் காவாக்கால் என்' என்றார். இதனான் வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.)

English explanation

Where thou hast power thy angry will to work, thy wrath restrain;Where power is none, what matter if thou check or give it rein

He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?