அதிகாரம் / Chapter 31
திருக்குறள் 302
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
இயலாவிடத்துச் சினந்தீது; இயலுமிடத்திலும் அதிற் றீதாயிருப்பன பிறவில்லை.
பரிமேலழகர்
சினம் செல்லா இடத்துத் தீது - ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மேல் எழின் தனக்கே தீதாம்; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - மற்றை எளியோர்மேல் எழினும் அதனின் தீயன பிற இல்லை. விளக்கம் (செல்லா 'இடத்துச் சினம் பயப்பது' இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே. ஏனையது 'இம்மைக்கண் பழியும் மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீயன பிற இல்லை,' என்றார். ஓரிடத்தும் ஆகாது என்பதாம்.)
English explanation
Where power is none to wreak thy wrath, wrath importent is ill;Where thou hast power thy will to work, 'tis greater, evil still
Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.